திருச்செந்தூர் டாக்டர் சிவந்திஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் இணையவழி கருத்தரங்கம் இன்று நடக்கிறது
திருச்செந்தூர் டாக்டர் சிவந்திஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் இணையவழி கருத்தரங்கம் இன்று நடக்கிறது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் சிவந்தி அறிவியல் குழுமம் சார்பில், தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு, தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவனங்களை இணைக்கும் பொருட்டு இணையவழி கருத்தரங்கு இன்று (ெவள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் வியாபார வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் பொ.மகேந்திரகுமார் ‘இந்திய மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உபயோக திட்டங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். சூரியசக்தி, காற்றாலை, அனல்மின் நிலையங்கள் உபயோகத்தைப் பற்றியும், இளம் பொறியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள், அதற்கு ஆயத்தமான தொழில்துறை செயல்படிப்புகள் பற்றியும் விளக்கி கூறுகிறார்.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் https://bit.ly/2Ycb3Oy என்ற இணைப்பின் வழியாக பங்கேற்கலாம். மேலும் கருத்தரங்கு குறித்த தகவல்களை பெற 9952102006 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணிலோ அல்லது sivanthiscienceclub@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ பெற்று கொள்ளலாம். கருத்தரங்கில் பங்கேற்கிறவர்களுக்கு மின்னணு சான்றிதழ் வழங்கப்படும். ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியர் பாலகுமார், பேராசிரியர்கள் பப்பிவின்சென்ட், வேல்முருகன், ராதிகா, மாணவ ஒருங்கிணைப்பாளர் பூபனா, சதானந்தன் ஆகியோர் செய்துள்ளனர். இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story