திருபுவனையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ
திருபுவனையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருபுவனை, செப்.
திருபுவனையில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து திருபுவனை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story