கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பூவேந்திரன் மகன் விக்னேஷ் (வயது 16). இவர் தெப்பம்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் பூவேந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் காணாமல் போன மாணவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தின் அருகே உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ராஜதானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே கிணற்றில் இறங்கி இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. விசாரணையில் இறந்தவர் காணாமல்போன மாணவர் விக்னேஷ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். செல்போன் அதிகம் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் விக்னேஷ் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story