காட்பாடி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


காட்பாடி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 10:51 PM IST (Updated: 7 Oct 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காட்பாடி

காட்பாடி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று முன்தினம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்தது. காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சி தலைவர்கள், 19 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு மையங்களில் இருந்த வாக்கு பெட்டிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் அந்தப் பெட்டிகள் லாரிகள் மூலம் வாக்கு எண்ணும் மையமான வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.

அறைக்கு சீல்

இந்த வாக்குப்பெட்டிகள் ஒரு அறையில் வைக்கப்பட்டு அதற்கு நேற்று காலை 7.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சீல் வைத்தார். அப்போது காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் வேட்பாளர்களின்  ஏஜெண்டுகள் உடனிருந்தனர்.

சீல் வைக்கப்பட்ட அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் சிறப்பு அதிரடிப்படையினர், அதிரடிப்படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் என 90 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Next Story