மயிலாடுதுறை-திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில்


மயிலாடுதுறை-திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:00 PM IST (Updated: 7 Oct 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை-திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயிலை ராமலிங்கம் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை-திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயிலை ராமலிங்கம் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில்
கொரோனா தொற்று பரவல் காரணமாக ெரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில தொலைதூர ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் நேற்று முதல் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழா மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் நடந்தது. இதில் ராமலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு கொடியசைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், ெரயில்வே துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
10 பெட்டிகளுடன்...
மயிலாடுதுறையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 7.12 மணிக்கு கும்பகோணத்துக்கும், 8.15 மணிக்கு தஞ்சாவூருக்கும், காலை 9.45 மணிக்கு திருச்சிக்கும் சென்றடைகிறது. 
பின்னர் மறுமார்க்கத்தில் இந்த ரெயில் திருச்சியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 9.40 மணிக்கு வந்தடையும். 10 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு விரைவு ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை, தஞ்சாவூர், ஆலக்குடி, பூதலூர், சோளகம்பட்டி, திருவெறும்பூர், மஞ்சத்திடல், பொன்மலை ஆகிய இடங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்கிறது.

Next Story