சேலையில் தீப்பிடித்து காயமடைந்த பெண் சாவு
உத்தமபாளையத்தில் மாதா கோவிலில் வழிபட்டபோது சேலையில் தீப்பிடித்து காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்தவர் வேதநாயகம். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 52). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள மாதா கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டு கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பற்றியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அந்தோணியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story