திண்டுக்கல்-திருச்சி இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை; இன்று முதல் தொடக்கம்
திண்டுக்கல்-திருச்சி இடையே பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த 1½ ஆண்டுகளாக பயணிகள் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. அவற்றில் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட முன்பதிவு செய்து பயணிக்க வேண்டியது ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் அனைத்து வழித்தடத்திலும் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் விளைவாக பல்வேறு வழித்தடத்தில் நேற்று மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது. ஆனால் திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பயணிகள் ரெயில் சேவை தொடங்குகிறது. இந்த ரெயில் தினமும் காலை 6.15 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு காலை 8.25 மணிக்கு திருச்சியை சென்றடையும். பின்னர் திருச்சியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்து சேருகிறது. இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன.
Related Tags :
Next Story