ரூ.33 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.33 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Oct 2021 1:30 AM IST (Updated: 8 Oct 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

ரூ.33 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

செம்பட்டு
சார்ஜாவில் இருந்து நேற்று மாலை திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை  மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த சுமன் (வயது 26) என்ற வாலிபர் தனது உடலில் மறைத்து கடத்தி வந்த சுமார் 633 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் இந்திய மதிப்பு ரூ.33 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுமனிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story