பீரோவில் இருந்த நகை திருட்டு
தளவாய்புரம் அருகே வீட்டில் பீேராவில் இருந்த நகைகள் திருட்டு போனது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே கொமந்தபுரம் பொன்னப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 56). இவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மின் மீட்டர் பெட்டி மேல் வைத்துவிட்டு இட்லி கடைக்கு சென்றுள்ளார். இவர்கள் இருவரும் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய போது வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை திறந்து அதிலிருந்த 20 கிராம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய வேந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story