அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஆலைக்கு சீல்
ஏழாயிரம் பண்ணை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தாயில்பட்டி,
ஏழாயிரம் பண்ணை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஏராளமான பட்டாசு ஆலைகள் பட்டாசு உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை மீறி செயல்படுகிறதா? என தனிப்படையினர் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள பனையடிபட்டியில் அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், பட்டாசு தனி தாசில்தார் சிவஜோதி, பனையடிபட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசு ஆலையில் சோதனை நடத்தினர்.
பட்டாசு ஆலைக்கு சீல்
அப்போது சாத்தூைர சேர்ந்த கோகுலன் (வயது 48) என்பவரின் பட்டாசு ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பட்டாசு உற்பத்தி அறைக்குள் நடக்காமல் மரத்தடியில் வேலை செய்வதும், பட்டாசு உற்பத்தியை கண்காணிக்க போர்மேன் இல்லாததும், விபத்து பயிற்சி பற்றிய பதிவேடு பராமரிக்கப்படவில்லை உள்பட பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன் பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தார். மேலும் இதுகுறித்து பனையடிபட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story