ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2021 2:19 AM IST (Updated: 8 Oct 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர் காங்கிரஸ் சார்பில் சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தூர், 
சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரப்பிரதேச அரசை கண்டித்து கண்ணில் கருப்பு ரிப்பன் கட்டி சாத்தூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், மாவட்ட செயலாளர் சந்திரன், வட்டார தலைவர் இருக்கன்குடி சுப்பையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் செய்திருந்தார். இதில் மகிளா காங்கிரஸ் தலைவி எலிசா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


Next Story