2 வீடுகளில் 16 பவுன் நகை- ரூ.65 ஆயிரம் திருட்டு


2 வீடுகளில் 16 பவுன் நகை- ரூ.65 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 8 Oct 2021 3:22 AM IST (Updated: 8 Oct 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

2 வீடுகளில் 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பாடாலூர்:

நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதியின் மகன் செந்தில்(வயது 25). இவரது வீட்டின் ஒரு பகுதியில் தாயுடன் வசித்து வருகிறார். மற்றொரு பகுதியில் பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து, அங்கிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
மற்றொரு வீட்டில்...
இதேபோல் அதே ஊரின் கிழக்குத்தெருவில் வசித்து வருபவர் மணிவேல்(40). இவர் அப்பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து இன்ஸ்பெக்டர் ஜெயராமனிடம் தீவிர விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை ேதடி வருகிறார். ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story