நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு


நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 7 Oct 2021 9:52 PM GMT (Updated: 7 Oct 2021 9:52 PM GMT)

நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நவராத்திரி விழாவையொட்டி பல வீடுகளில் கொலு மேடை அமைக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு படியிலும் களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு சுவாமி சிலைகள், வெவ்வேறு வகையான பொருட்களை இடம்பெற செய்து பெண்கள் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் பெண் பக்தர்கள் விரதம் இருந்து பூஜை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் கொலு அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். நேற்று சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Next Story