கோர்ட்டு அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடி கைது
கோர்ட்டு அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் அருகே நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் கத்தியுடன் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். இதனை கண்ட அங்கு ரோந்து பணியில் நின்ற பெரம்பலூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் பெரம்பலூர் சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 22) என்பதும், நவாஸ் செரீப் என்பவர் பெரம்பலூர் கோர்ட்டில் கொலை வழக்கு ஒன்றிற்கு ஆஜராக வருவதாகவும், அவரது பாதுகாப்பிற்காக கத்தியுடன் வந்ததும் தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். தமிழ்ச்செல்வன் ரவுடி பட்டியலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story