பாளையங்கோட்டையில் ெகாலை வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பாளையங்கோட்டையில் ெகாலை வழக்கில் கைதான 6 பேர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 8 Oct 2021 3:47 AM IST (Updated: 8 Oct 2021 3:47 AM IST)
t-max-icont-min-icon

ெகாலை வழக்கில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை:
பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தரபாண்டியன் (வயது 39), முத்துக்குமார் என்ற வாத்துமுத்து (33), நாராயணன் (20), பழனி (30), ஸ்ரீராம்குமார் (22) மாணிக்கராஜா (25). இவர்கள் மீது பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில், இசக்கிமுத்து என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இதனால் இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், உதவி கமிஷனர் பாலச்சந்திரன், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். 
இதை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் ஏற்று சுந்தரபாண்டியன், முத்துக்குமார், நாராயணன், பழனி, ஸ்ரீராம்குமார், மாணிக்கராஜா ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழங்கினார்.

Next Story