அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர்
அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர்
ராமேசுவரம்
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நரேந்திரசிங் (வயது 26). கார் மூலம் ராமேசுவரம் வருகை தந்த இவர் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும், உலக நன்மைக்காகவும் ராமேசுவரம் கோவில் வாசல் பகுதியில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணமாக நேற்று புறப்பட்டார். நேற்று காலை கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் இருந்து தனது ஓட்ட பயணத்தை தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக முடிய வேண்டியும், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவும், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணமாக செல்ல முடிவு செய்து இங்கிருந்து புறப்பட்டு உள்ளேன். ஒரு நாளைக்கு 55 கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓட உள்ளேன். ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்டமாநிலங்கள் வழியாக 2,912 கிலோமீட்டர் தூரம் உடைய அயோத்திக்கு செல்ல உள்ளேன். இந்த ஓட்ட பயணத்தை 55 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு கின்னஸ் சாதனை முயற்சியாக செய்ய இருக்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story