அரசு வேலை வழங்க வலியுறுத்தி நர்சு உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்


அரசு வேலை வழங்க வலியுறுத்தி நர்சு உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2021 6:12 AM IST (Updated: 8 Oct 2021 6:12 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வழங்க வலியுறுத்தி நர்சு உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

நர்சு உதவியாளர் பயிற்சி முடித்து பணிக்காக காத்திருப்பவர்கள் அரசு வேலை வழங்க வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறாக பயிற்சி முடித்து கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் வேலைக்காக காத்து இருப்பதாக கூறி போராட்டத்தில் களம் இறங்கினர்.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘சுமார் 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது எங்களுக்கு வயதும் கடந்து விட்டது. வயது வரம்பு அதிகமாக இருந்தால் கூட மேலும் காத்திருப்போம். ஆனால் வயது வரம்பு இல்லை. அதனால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’ என்றனர்.

Next Story