டி.ஜி.பி. அலுவலகம் அருகே தீக்குளிக்க முயற்சி
சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே திடீரென தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பெயர் சசிகலா. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். கடும் எதிர்ப்பை மீறி இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே வந்தார். திடீரென்று தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு காவலுக்கு நின்ற போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள்.
பின்னர், டி.ஜி.பி. அலுவலகத்தில் பிரபாகரன் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், தங்களுக்கு சேர வேண்டிய குடும்ப சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது குறித்து போலீசில் புகார் கொடுத்த பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், தீக்குளிப்பு போராட்டம் நடத்த முற்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story