திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 8 Oct 2021 11:43 AM IST (Updated: 8 Oct 2021 11:43 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடி, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, திருவள்ளூர் உதவி கலெக்டர் (பயிற்சி) செல்வி அனாமிகா ரமேஷ், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு் பாஸ்கரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story