எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Oct 2021 5:27 PM IST (Updated: 8 Oct 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

எட்டயபுரம்:
எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியில் அதிக பாரங்கள் ஏற்றிக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இரவுநேரங்களில் வருவதாகவும், இதனை தடை செய்யக்கோரி இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் கான்சாபுரத்தைச் சேர்ந்த நாடார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் இதுதொடர்பாக எட்டயபுரம் தாசில்தார் அய்யப்பனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story