ஆதித்தனார் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா


ஆதித்தனார் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 8 Oct 2021 5:39 PM IST (Updated: 8 Oct 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண். 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் (சுயநிதிப்பிரிவு) சார்பில், மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், நிறுவன தலைவர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் சிங்காரவேலு, சிரில் அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன் சேசு அடைக்கலம், சுமதி செந்தில்குமாரி, டயானா, கவிதா, ராஜபூபதி, ஜெயந்தி, ெபனட், ஹெட்கேவர் ஆதித்தன், பகுதிநேர வழக்கறிஞர் பாசமலர், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் செயலர் சுஜெய், இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர் ஜெயசுதன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story