உயிருக்கு ஆபத்தான நிலையில் பஸ் ஏணிப்படியில் பயணிக்கும் மாணவர்கள்


உயிருக்கு ஆபத்தான நிலையில்  பஸ் ஏணிப்படியில் பயணிக்கும் மாணவர்கள்
x
தினத்தந்தி 8 Oct 2021 5:51 PM IST (Updated: 8 Oct 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

ராயப்பன்பட்டியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பஸ் ஏணிப்படியில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.


உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் 3 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடங்களில் உத்தமபாளையம், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, சின்ன ஓவுலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கி வருகிறது. 
இதனிடையே காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி இல்லாததால் இடநெருக்கடி நிலவுகிறது. இதனால் மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டிலும், பஸ்சின் பின்புறமுள்ள ஏணிப்படியிலும் புத்தகபையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு பயணிக்்கின்றனர். எனவே பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Next Story