மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் + "||" + Sexual harassment of head teachers Education Officer Dismissed

தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்

தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
வேடசந்தூரில் சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேடசந்தூர்: 

பாலியல் தொல்லை 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 3 தலைமை ஆசிரியைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். 
அதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் தனது செல்போனில் இருந்து வாட்ஸ்-அப், முகநூல் ஆகிய சமூக வலைத்தளம் மூலம் தகவல் அனுப்பி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தனர். இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர். 

பணியிடை நீக்கம் 
இதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை நேரில் அழைத்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமியிடம் அவர் சமர்ப்பித்தார். 

அதன்பேரில் அவர் இருதரப்பினரிடமும் மேல் விசாரணை நடத்தினார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் கல்வி அதிகாரிகள் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது
சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசாா் கைது செய்தனா்.
2. போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
வேடசந்தூர் அருகே போலீஸ் சார்பில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
3. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது; குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி வேதனை
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது என்று குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி கூறினார்.
4. பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை: தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை
நெல்லையில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர்.