புவனகிரி அருகே 2 தலைகளுடன் பிறந்த அதிசய எருமை கன்று குட்டி
தினத்தந்தி 8 Oct 2021 10:13 PM IST
Text Sizeபொதுமக்கள் வேடிக்கை பார்க்க குவிந்ததால் பரபரப்பு
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன், விவசாயி. இவருக்கு சொந்தமான எருமை மாடு நேற்று காலை 2 தலைகளுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. இதனிடையே பிறந்த சில மணி நேரங்களில் 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி இறந்து போனது. எருமை மாடு 2 தலைகளுடன் கன்று ஈன்றதை அறிந்த அக்கிராம மக்கள் திரண்டு அதிசய கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire