தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் 3 பேருக்கு கலர் டி வி பரிசு. கலெக்டர் அமர்குஷ்வாஹா பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் முகாம்களில் தடுப்பூசி போட்டுகொள்பவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கலர் டி.½வி. பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் முகாம்களில் தடுப்பூசி போட்டுகொள்பவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கலர் டி.வி. பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்வம் காட்டவில்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் உள்ளனர். இவர்களில் இதுவரை 5 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மீதமுள்ள 4½ லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி மீது இன்னும் சிலருக்கு பயம் இருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை.
முதல் தடுப்பூசி முகாமில் 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அதன் பிறகு நடைபெற்ற 2, 3 மற்றும் 4-வது மெகா தடுப்பூசி முகாமில் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது.
பட்டியல் தயாரிப்பு
முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 31 ஆயிரம் நபர்கள் அவர்களுக்கான காலக்கெடு கடந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களை கண்காணித்து தவறாமல் 2-வது தவணை தடுப்பூசி போடவும் மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 5-வது மெகா தடுப்பூசி முகாம்கள் 208 ஊராட்சிகள், 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்பசுகாதார நிலையங்களிலும் மற்றும் வீடு, வீடாகவும் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது. 208 ஊராட்சிகளில் தலா ஒரு குழுவும், 4 நகராட்சி பகுதிகளில் 6 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 பேரூராட்சி பகுதிகளி தலா 2 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 276 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் குழுக்கள் பணிபுரிய உள்ளனர். மாவட்டத்தில் உள்ள கிராம செவிலியர், ஊராட்சி செயலர் உள்ளிட்ட மருத்துவ குழுக்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கலர் டி.வி.பரிசு
மேலும் இந்த மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 3 பேருக்கும் தலா ஒரு 32 இன்ஞ் கலர் டிவி பரிசாக வழங்கப்படும். மேலும் 52 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேன்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story