சோளிங்கர் அருகே ஓடையில் மீன்பிடித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி
சோளிங்கர் அருகே ஓடையில் மீன்பிடிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்தி இறந்தான். மற்றொரு மாணவன் மீட்கப்பட்டான்.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே ஓடையில் மீன்பிடிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்தி இறந்தான். மற்றொரு மாணவன் மீட்கப்பட்டான்.
தண்ணீரில் மூழ்கி பலி
சோளிங்கரை அடுத்த நந்திமங்கலம் ஏரி நிரம்பி ஓடையில் வெள்ளம் செல்கிறது. இந்தநிலையில் சூரை மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அப்பு என்கிற மைதீன்அரசு (வயது 13), யோககோஷ் (12) ஆகியோர் ஓடையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். மீன்பிடித்து கொண்டிருந்தபோது இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கதினர் சென்று இருவரையும் மீட்டு 108 ஆண்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் மைதீன் அரசு இறந்துவிட்டது தெரியவந்தது.
தடுப்புகள் அமைப்பு
இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடையில் சிறுவன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து ஓடைப்குதியில் தற்காலிகமாக யாரும் செல்லாதவாறு முள்வெளி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏ.எம்.முனிரத்தினம் மருத்துவமனைக்கு சென்று மைதீன் அரசு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அரசு நிதி உதவி வழங்க கலெக்டருக்கு போன்மூலம் தெரிவித்து நிதி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story