சங்கராபுரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை


சங்கராபுரத்தில்  இடி மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 8 Oct 2021 10:25 PM IST (Updated: 8 Oct 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பும் பணி தாமதம்

சங்கராபுரம்

சங்கராபுரத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் பாதசாரிகள் கையில் குடைபிடித்துக்கொண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் தொப்பி அணிந்து கொண்டும் சென்றதை காண முடிந்தது. அதிக வெப்பத்தினால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிந்து தாகத்தை வருத்தியது. இதனால் பொதுமக்கள் இளநீர், மோர், கரும்புசாறு, பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகி தாகத்தை தணித்துக்கொண்டனர்.

பின்னர் பகல் 12 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. பகல் 12 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 1.30 மணிவரை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் சங்கராபுரம் ஒன்றியத்தில் இன்று(சனிக்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி சங்கராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்கு பெட்டிகள், படிவங்கள், தளவாட பொருட்கள் ஆகியவை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று பகல் 12 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழையின் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story