வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் ஒன்றியம் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 214 வாக்குச் சாவடி மையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீல் வைத்த வாக்குப் பெட்டிகள் காட்பாடி ரோடு சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? வாக்கு எண்ணுவதற்கான இடங்கள் ஆகியவற்றை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர் இ.கோபி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்
Related Tags :
Next Story