முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு
லஞ்சப்புகாரில் சிக்கிய திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வேலூர்
லஞ்சப்புகாரில் சிக்கிய திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு சோதனை
காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் அசோகன். இவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றியவர். இவருடைய மனைவி ரேணுகா தேவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் காட்பாடி வி.ஜி.ராவ் நகரிலுள்ள அசோகன் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மேல்எருக்காட்டூரில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர் பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி உள்ளதாக தெரிகிறது.
வங்கி கணக்கு
இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், அசோகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளோம். அதில் சோதனை விவரங்களை குறிப்பிடுவோம். இதையடுத்து அசோகன் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளோம்.
மேலும் லாக்கர் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அசோகன் மற்றும் அவரின் மனைவியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும், வங்கி லாக்கர் இருந்தால் அவற்றை திறந்து பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story