வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 8 Oct 2021 11:14 PM IST (Updated: 8 Oct 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:
நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாகை வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.2 லட்சம் கஞ்சா
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். இதில் வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்ட பகுதியை சேர்ந்த சிந்தாமணி (வயது 58) என்பவரது வீட்டில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். 
5 பேர் கைது
மேலும் இதுதொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சத்தியவாணி (30), தங்கபாண்டி (30), கலைமணி (30), செல்லூர் சுனாமி குடியிருப்பு சேர்ந்த சத்யா (30) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 

Next Story