பொலிவிழந்த செயற்கை நீரூற்று புத்துயிர் பெறுமா


பொலிவிழந்த செயற்கை நீரூற்று புத்துயிர் பெறுமா
x
தினத்தந்தி 8 Oct 2021 11:20 PM IST (Updated: 8 Oct 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

பொலிவிழந்த செயற்கை நீரூற்று புத்துயிர் பெறுமா

கோவை

கோவை வ.உ.சி. பூங்காவில் பொலிவிழந்து காணப்படும் செயற்கை நீரூற்று புத்துயிர் பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

வ.உ.சி. பூங்கா 

கோவை மாநகர பகுதி மக்களின் பொழுதுபோக்காக இருப்பது பூங்காக்கள் தான். அதில் குறிப்பாக வ.உ.சி. உயிரியல் பூங்கா, காந்தி பூங்கா உள்பட பூங்காக்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 


இதில் வ.உ.சி. தாவரவியல் பூங்காவில் வண்ண மீன்கள் காட்சியகம், சிறுவர் ரெயில், செயற்கை நீரூற்று என பொது மக்களை கவரும் அம்சங்கள் உள்ளன. 

பொலிவிழந்த நீரூற்று 

இரவு நேரங்களில் பல வண்ண விளக்கு வெளிச்சத்தில் செயற்கை நீரூற்றில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காண்பதற்கு அற்புத காட்சியாக இருக்கும்.

 ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த செயற்கை நீரூற்று சில ஆண்டுகளாக பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. 

இது குறித்து பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது

வ.உ.சி. பூங்காவில் வண்ண விளக்கு ஒளிவெள்ளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நீரூற்று பொதுமக்களை மிகவும் கவர்ந்து வந்தது. அதில் பலரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

சரிசெய்ய வேண்டும் 

தற்போது செயற்கை நீரூற்று பொலிவிழந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

எனவே பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றை சரிசெய்து புத்துயிர் அளிக்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளோம் 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, வ.உ.சி.பூங்கா செயற்கை நீரூற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் தற்போது தண்ணீர் இல்லை.

 எனவே தண்ணீர் வசதி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பணி முடிந்ததும் செயற்கை நீரூற்று புத்துயிர் பெறும் என்றனர். 

Next Story