வாக்குப்பெட்டிகளை தலைச்சுமையாக எடுத்து சென்ற பணியாளர்கள்
வாக்குப்பெட்டிகளை தலைச்சுமையாக எடுத்து சென்ற பணியாளர்கள்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில்உள்ள ஆலங்காயம் ஊராட்சியில் இன்று (சனிக்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் நெக்னாமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 1,673 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மலைப் பகுதியில் மட்டும் 527 வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் தரைப்பகுதியில் உள்ள புருஷோத்துமகுப்பம் என்ற பகுதியிலும் உள்ளனர்.
இவர்களுக்காக மலைப்பகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், மலையடிவாரத்தில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் கடந்தும் ஒரு ஊராட்சியின் தலைமையிடமாக உள்ள இந்த நெக்னா மலை ஊராட்சிக்கு இதுவரை சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு 8 கிலோமீட்டர் தூரத்துக்கும் மண் சாலை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைமுழுவதும் மண் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஏற்கனவே நடந்த தேர்தலின்போது ஒற்றையடிப் பாதையின் வழியாக கழுதைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.
இன்று நடைபெறஉள்ள தேர்தலுக்காக பணியாளர்கள் வாக்குப்பெட்டிகளை தலையில் சுமந்து சென்றனர். 8 கிலோ மீட்டர் தூரமும் நடந்தே சென்றனர்.
Related Tags :
Next Story