1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் நாளை 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நாளை 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5-வது கட்ட தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது விடுபட்டுள்ள தகுதியுடைய 18 வயதுக்கு மேற்பட்ட, அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பொருட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 5-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மாபெரும் தடுப்பூசி முகாம் எவ்வித இடையூறுகளும் இன்றி நடைபெறுவதை உறுதிசெய்திடும் வகையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், எவ்வித இடையூறுமின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு வட்டார வாரியாக வட்டார பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இப்பணிக்காக தேவையான அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட உள்ளனர். ஆகவே பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, திருப்பூர் மாவட்டம் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக மாற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு...
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 15 லட்சத்து 55 ஆயிரத்து 2 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 78 சதவீதம் ஆகும். 4 லட்சத்து 9 ஆயிரத்து 346 நபர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 35 சதவீதம் ஆகும்.
மேலும் 4 லட்சத்து 40 ஆயிரத்து 298 நபர்களுக்கு முதல் தவணையும், 1 லட்சத்து 73 ஆயிரத்து 585 நபர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.
இந்த 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தடுப்பூசி பொதுமக்கள் கட்டாயம் செலுத்த வேண்டும். இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வினித் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story