மலைரெயில் போக்குவரத்து இன்று தொடங்குகிறது
பாறையை வெடி வைத்து தகர்த்து தண்டவாளம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து மலைரெயில் போக்குவரத்து இன்று தொடங்குகிறது.
குன்னூர்
பாறையை வெடி வைத்து தகர்த்து தண்டவாளம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து மலைரெயில் போக்குவரத்து இன்று தொடங்குகிறது.
வெடி வைத்து பாறை தகர்ப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 6-ந் தேதி இரவு பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹல்குரோவ்-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பாறையை அகற்றி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ராட்சத பாறை என்பதால் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, சிறிய கற்களாக மாற்றப்பட்டது. தொடர்ந்து அவை அகற்றப்பட்டு, தண்டவாளம் சீரமைக்கப்பட்டது.
இன்று தொடங்குகிறது
இந்த பணிக்காக மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சீரமைக்கப்பட்ட மலைரெயில் பாதையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மலைரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி அளித்தனர்.
அதன்படி இன்று(சனிக்கிழமை) முதல் மலைரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story