வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு


வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 12:24 AM IST (Updated: 9 Oct 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊட்டி

நீலகிரியில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-4(மசினகுடி ஊராட்சி), வார்டு எண்-11 (சேரங்கோடு ஊராட்சி) ஆகிய 2 ஒன்றிய கவுன்சிலர்கள், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சி வார்டு எண் 6-ல் உறுப்பினர் என மொத்தம் 3 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. 3 இடங்களில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மசினகுடி, சேரங்கோடு ஊராட்சிகளில் தலா 6 வாக்குச்சாவடிகள், நடுஹட்டி ஊராட்சியில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கூடலூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வாக்குப்பதிவுக்கான பொருட்கள், வாக்கு சீட்டுகள் போன்றவை நேற்று அனுப்பப்பட்டது. 

முன்னேற்பாடுகள்

மசினகுடி ஊராட்சியில் 1,813 ஆண் வாக்காளர்கள், 1,973 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 786 பேர் உள்ளனர். சேரங்கோடு ஊராட்சியில் 2,254 ஆண்கள், 2,309 பெண்கள் என மொத்தம் 4,563 வாக்காளர்கள் இருக்கின்றனர். நடுஹட்டி ஊராட்சியில் 225 ஆண்கள், 226 பெண்கள் என மொத்தம் 451 வாக்காளர்கள் உள்ளனர். இன்று நடக்கும் தேர்தலில் 8,800 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரியில் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

கையுறை 

வாக்காளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். கையுறை வழங்கப்படுவதோடு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர் அனுமதிக்கப்படுவர். காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அலுவலர்கள் 64 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். தேர்தலை 5 நுண் பார்வையாளர்கள் கண்காணிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 


Next Story