வாக்காளர்களுக்கு பணம், சேலை வழங்கியதாக புகார்


வாக்காளர்களுக்கு பணம், சேலை வழங்கியதாக புகார்
x
தினத்தந்தி 9 Oct 2021 12:42 AM IST (Updated: 9 Oct 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலையொட்டி மாங்காட்டில் வாக்காளர்களுக்கு பணம், சேலை வழங்கியதாக புகார் எழுந்தது.

வடகாடு, 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. 
இதையொட்டி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், வடகாடு அருகேயுள்ள மாங்காட்டில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சேலை வழங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story