72 பேருக்குகொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. பாதிப்பு சற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 650-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 84 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 864-ஆக உள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 824 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று கொரோனாவுக்கு மாவட்டத்தில் பலி இல்லை என்பதால், பலி எண்ணிக்கை 962-ஆக உள்ளது.
Related Tags :
Next Story