காளை உருவம் பொறிக்கப்பட்ட நடுக்கல் ஆய்வு


காளை உருவம் பொறிக்கப்பட்ட நடுக்கல் ஆய்வு
x
தினத்தந்தி 9 Oct 2021 1:07 AM IST (Updated: 9 Oct 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகே காளை உருவம் பொறிக்கப்பட்ட நடுக்கல்லை ஆய்வு செய்ய வேண்டும் என்று புராதன ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குண்டடம்
குண்டடம் அருகே காளை உருவம் பொறிக்கப்பட்ட நடுக்கல்லை ஆய்வு செய்ய வேண்டும் என்று  புராதன ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடுகல்
குண்டடத்தை அடுத்துள்ள எரகாம்பட்டியிலிருந்து சந்திராபுரம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் பல வருடங்களாக 10 அடி நீளமும் 2அடி அகலமும் கொண்ட நடுகல்  கிடக்கிறது. அந்த கல்லில் காளை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் வட்டத்திற்குள் செவ்வக வடிவத்தில் கோடுகளும், அதன் கீழ் எழுத்துக்களும் உள்ளன.  இதுபற்றி சந்திராபுரம் பகுதியை சேர்ந்த புராதன ஆர்வலர் பாலு கூறும்போது, “பொதுவாக எரகாம்பட்டி, முத்துக்கவுண்டம்பாளையம், சடையபாளையம், சிங்காரிபாளையம், சந்திராபுரம்  பகுதிகளில் கிணறு தோண்டும்போது முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தானிய குதிர்கள் உள்ளிட்டவைகளும் ஆங்காங்கே காண முடிகிறது. 
ஆய்வு செய்ய வேண்டும்
இந்த கல்லில், பெரிய திமிலுடன் கூடிய நாட்டு மாட்டின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  எனவே தொல்லியல் துறையினர் இந்த கல்லை ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

Next Story