வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி தாலுகா அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்
உடுமலையை அடுத்த புக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
தளி
உடுமலையை அடுத்த புக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
தங்கம்மாள் ஓடை
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தங்கமாள் ஓடை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். இந்த ஓடையை ஒட்டியவாறு கட்டியிருந்த வீடுகளை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி நிர்வாகம் அகற்றியது. அப்போது அவர்களுக்கு புக்குளம் பகுதியில் கட்டப்படும் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.அதை தொடர்ந்து அங்கு வசித்து வந்த பொதுமக்கள் மாற்று இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் தெரிவித்தபடி அவர்களுக்கு வீடுகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் உறுதி அளித்தபடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யக்கோரி பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.
பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் ராமலிங்கம் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story