வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 9 Oct 2021 1:15 AM IST (Updated: 9 Oct 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

கே.கே.நகர்
 திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நல்லதண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் அமிருதீன். இவருடைய மகன் ஆஷிக் (வயது 13). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டுக்கு அருகே உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story