பாலத்தின் மீது கார் மோதியது
வத்திராயிருப்பு அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மோதியது
தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயபாண்டியன் (வயது34), தினேஷ் (34), ராஜா (30) ஆகிய 3 பேர் தேனி பகுதியில் உள்ள தனியார் பார்மசியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இவர்கள் 3 பேரும் காரில் தேனியில் இருந்து வந்து வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மெடிக்கலில் மருந்துகளை வினியோகம் செய்துவிட்டு வத்திராயிருப்பிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கோபாலபுரம் அருகே உள்ள பார்வதி ஓடை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
3 பேர் படுகாயம்
இந்த விபத்தில் காருக்குள் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அப்போது அந்த சாலை வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் ராஜா ஆகிய 2 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருதின்றனர்.
Related Tags :
Next Story