கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்


கோவில்களில்  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 9 Oct 2021 2:16 AM IST (Updated: 9 Oct 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தாமரைக்குளம்:
அரியலூர் செட்டி ஏரிக்கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா வழிபாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மகேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார். நேற்று கவுமாரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(சனிக்கிழமை) வராகி, நாளை(ஞாயிற்றுக்கிழமை) மகாலட்சுமி, அதற்கு அடுத்த நாட்களில் வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, சாமுண்டி உள்பட தினமும் ஒவ்வொரு அலங்காரங்களில் அம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அரியலூர் கேப்ரியல் தெருவில் உள்ள கோவிலில் மகா காளியம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Next Story