கடலூர் உழவர் சந்தைக்குள் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்


கடலூர் உழவர் சந்தைக்குள் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
x
தினத்தந்தி 9 Oct 2021 2:30 AM IST (Updated: 9 Oct 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் உழவர் சந்தைக்குள் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கடலூர், 

கடலூர் இம்பீரியல் சாலையில் அண்ணா பாலம் அருகில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு கடலூர் அடுத்த ராமாபுரம், வழிசோதனைபாளையம், நாணமேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.
இதற்காக கடலூர் நகரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக காலையிலேயே கடலூர் உழவர் சந்தைக்கு படையெடுத்து வருகின்றனர். இங்கு தினமும் சராசரியாக 20 முதல் 25 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இங்கு வரும் பெரும்பாலானோர் தங்கள் வாகனங்களை உழவர் சந்தைக்குள்ளே ஓட்டிச் சென்று, ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்துகின்றனர். அவர்கள் உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். ஆட்டோக்களும் உழவர் சந்தைக்குள் நிறுத்தப்படுவதால் கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. 
எனவே உழவர் சந்தைக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக உழவர் சந்தையின் முன்பு சாலையோரம் வாகனங்களை நிறுத்தவோ அல்லது உழவா் சந்தையின் பின்புறம் வாகனங்களை நிறுத்த அதிகாாிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story