பாளையங்கோட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


பாளையங்கோட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 4:02 AM IST (Updated: 9 Oct 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிணற்றில் பிணம்
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியை அடுத்த அலங்காரப்பேரி கீழூரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 50). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2-ந்தேதி திடீரென்று மாயமானார். இந்த நிலையில் அவர் அங்குள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த முத்துராமலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடல் ஒப்படைப்பு
இதற்கிடையே முத்துராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து முத்துராமலிங்கத்தின் உடலை பெற்று கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர். அதன்படி நேற்று மதியம் முத்துராமலிங்கத்தின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

Next Story