பள்ளிப்பட்டில் இடியுடன் பலத்த மழை
பள்ளிப்பட்டில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளிப்பட்டு சுற்றுப்புற கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது.இந்த நிலையில் பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள சானாகுப்பம், சங்கீத குப்பம், நெடியம் காலனி வெங்கட்ராஜ் குப்பம் போன்ற பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக மலைகளில் இருந்து வரும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் வெள்ளம் வீடுகளில் புகுந்தது. வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இவர்கள் விடிய விடிய தூங்காமல் தங்கள் வீட்டில் புகுந்த மழை நீரை வெளியே அகற்றுவதில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு நகரத்திலும் நள்ளிரவு தடைபட்ட மின்சாரம் நேற்று மதியம் வரை சீர் செய்யப்படாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story