குடும்ப தகராறால் ஆத்திரமடைந்து வெறிச்செயல்: மனைவி மீது திராவகம் வீசிய பெயிண்டர் கைது
குடும்ப தகராறால் ஆத்திரத்தில் மனைவி மீது திராவகம் வீசிய பெயிண்டரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஓம்முருகன் (வயது 41). பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி (37). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழரசிக்கும், முருகனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழரசி சாஸ்திரி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோவில் தெருவில் தமிழரசி நடத்தி வரும் செல்போன் கடைக்கு நேற்று காலை முருகன் வந்து மனைவியிடம் சேர்ந்து வாழலாம் என்று கூறி அழைத்துள்ளார். இதற்கு தமிழரசி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த பாத்ரூம் கழுவும் ஆசிட்டை அவரது முகத்தில் ஊற்றினார்.
இதனால் தமிழரசி முகம் மற்றும் கை கால்களில் காயம் ஏற்பட்டது. பாத்ரூம் திராவகம் என்பதால் மிகப்பெரிய காயம் ஏற்படவில்லை. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தூக்கி சிகிச்சைக்காக சேர்த்தனர். இது சம்பந்தமாக திருவொற்றியூர் உதவி கமிஷனர் முகமது நசீர், இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய முருகனை அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
அதே போல், சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம ்சத்யா நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (34). எலக்ட்ரீசியனான இவர், மனைவி கோபித்து வீட்டை விட்டு சென்ற மன உளைச்சல் அடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story