சென்டிரல் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி


சென்டிரல் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 Oct 2021 7:32 AM IST (Updated: 9 Oct 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

சென்டிரல் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.

சென்னை, 

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் சானிகுளம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதைக்கண்ட அப்பகுதியில் வந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த சென்டிரல் ரெயில்வே போலீசார், உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வாலிபர் தண்டவாளத்தை கடக்கும் போது மின்சார ரெயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story