மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவொற்றியூர்,
சென்னை மணலிபுதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு நேற்று காலை 6.30 மணியளவில் அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
அப்போது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை பக்தர்கள் சுமந்தபடி சுற்றி வந்து அய்யா சிவ, சிவ அர, கர என்ற உகப்படிப்பு நாமத்தை எழுப்பினர். அப்போது 60 அடி உயர கொடி கம்பத்தில் திருநாமக் கொடி ஏற்றப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ஜெயதுரை மற்றும் கோவில் நிர்வாக தலைவர் துரை பழம், துணைத்தலைவர் சுந்தரேசன், பொருளாளர் ஜெயக்கொடி, செயலாளர் ஐவென்ஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மாலை அய்யா காளை வாகனத்தில், பதிவலம் வந்தார். அதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வான, சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு எட்டாம் நாளான 15-ந்தேதி இரவு நடைபெறும். திருத்தேர் உற்வசம் 10-ம் நாளான 17-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். அன்று இரவு திருநாம கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் நிர்வாகம் சார்பில் 3 வேலைகளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
Related Tags :
Next Story