வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் - கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ள விவரங்களையும் இடங்களையும் கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
மீஞ்சூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளம் புயல் பாதிக்கப்படும் இடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு மாவட்டம்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவரும் முதன்மை செயல் அலுவலருமான பாஸ்கரனை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்திற்கு அவர் திடீரென வருகை தந்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாபிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயக்குமார், பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. செல்வம், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜவேல், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் சாந்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அத்திப்பட்டு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எம்டிஜி.கதிர்வேல் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேரிடர்பாடு துறையினர் மூலம் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து அத்திப்பட்டு புதுநகர் பகுதிக்கு நேரில் சென்ற மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மழை வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை குறித்து நேரில் அதிகாரியுடன் ஆய்வு செய்தார்.
அப்போது முன்னேற்பாடுகள் பற்றி மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலருக்கு விளக்கி கூறினார்.
Related Tags :
Next Story