சீகூர், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு குழு ஆய்வு நடத்தியது.


சீகூர், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு குழு ஆய்வு நடத்தியது.
x

சீகூர், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு குழு ஆய்வு நடத்தியது.

கூடலூர்

சீகூர், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு குழு ஆய்வு நடத்தியது.

யானைகள் வழித்தடம்

நீலகிரி மாவட்டம் முதுலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதிகளான மசினகுடி, சீகூர், சிங்காரா சமவெளி பகுதிகளில் யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு கிராம வரைபடத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அரசின் நடவடிக்கையை ஐகோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 14-10-2020 அன்று யானைகள் வழித்தடம் தொடர்பாக ஆய்வு நடத்த ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கடராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆட்சேபனை

இந்த குழு மசினகுடி, சிங்காரா, சீகூர் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. மேலும் யானைகள் வழித்தட நடவடிக்கை குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது. 

அதன்படி ஆட்சேபனை உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் விவரங்களையும் குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நகல்களை இணைத்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்தனர். மொத்தம் 224 பேர் உரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். 

நீதிபதி குழு ஆய்வு

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கடராமன் தலைமையிலான குழு நேற்று மசினகுடியில் உள்ள சீகூர், வாழைத்தோட்டம், சிங்காரா, பொக்காபுரம் ஆகிய இடங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அங்கு சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளை பார்வையிட்டனர். 

பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கடராமன் கூறும்போது, விசாரணைக்குழுவிடம் 224 பேர் ஆவணங்களை தாக்கல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்துக்கள் மற்றும் அதன் மீதான கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

அப்போது மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு நடக்கிறது.


Next Story